என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

nayanthara Vignesh Shivan

Nayanthara நடிகை நயன்தாராவின் பெயர் தான் சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தியான செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை நயன்தாரா வெளியீட்டு இருந்தார்.

READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

அவர் விவாகரத்து வதந்திக்கு மாற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியிட்ட வீடியோ ட்ரோலாக மாறி நயன்தாராவின் பெயர் இன்னும் ட்ரெண்ட் ஆகியது என்று சொல்லலாம். அதன் பிறகு திடீரென நேற்று காலை நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் நான் தொலைந்துவிட்டேன் என்று பதிவிட்டு இருந்தது ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

இதனால் நயன்தாரா விவாகரத்து வதந்தியான தகவலும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், தான் நயன்தாரா தனது கணவருடன் சந்தோசமாக இருப்பதாகவும், விவாகரத்து எல்லாம் ஒன்னும் இல்லை என்பதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக துபாயில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் செல்வது போல எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே செல்கிறோம் என்பது போல பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து எல்லாம் ஆகவில்லை அப்படி பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்