தினமும் இதற்காக 10 நிமிடம் ஒதுக்குங்க.! மாணவர்களுக்கு நயன்தாராவின் அறிவுரை…
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போதெல்லாம் தனது நான்கு மாத இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாக தனது கடமைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
தனது நடிப்பு மற்றும் பிற தொழில்களை தவிர, நயன்தாரா புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் போல் தெரிகிறது. அது வேற ஒன்றும் இல்லை, சென்னையை தளமாகக் கொண்ட பிரபல தனியார் கல்லூரி/பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஆக நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டாராம்.
இந்நிலையில், நேற்றய தினம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா, “கல்லூரி வாழ்க்கை பல நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் யாருடன் பழகுவது என்பது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கல்லூரி நாட்கள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே மிகவும் கவனமாக இருங்கள், நீங்கள் இங்கிருந்து வெளியேறிய பிறகு நீங்கள் வெற்றிகரமான நபராக மாறினாலும் அடக்கமாகவும் அமைதியாகவும் இருங்கள் என்று கூறியதோடு, “தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது உங்கள் பெற்றோருடன் செலவிடுங்கள், அது பணத்தால் வாங்கக்கூடியதை விட அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும்” என்று முக்கிய அறிவுரகளை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பிரியா ராமன் நடிக்கும் தனது முதல் ஹிந்தி படமான ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது போக, அஹமது இயக்கிய ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்.