இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த டப்பிங் பணியின் போது, நயன்தாரா படத்தில் தான் நடித்த காட்சியை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டுள்ளார். இது குறித்து சமந்தா இன்ஸ்டாவில் கூறியது “நயன்தாரா அற்புதமான நடிகர். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவரின் நடிப்பை உங்களிடம் காட்ட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதுவரையிலான அவரின் பெஸ்ட் இதுவாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…