திருப்பதிக்கு சென்ற விக்கி-நயன்..! வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம். இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இதற்கிடையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிப்பில் இன்று வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து, படம் வெற்றிபெற வேண்டி விக்னேஷ்சிவன் -நயன்தாரா ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதற்கான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.