சென்னை : நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) தனது 39வது பிறந்தநாளை கொண்டுகிறார்.
அவரது சிறப்பு நாளைக் கொண்டாடும் வகையில், விக்கியின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறப்பு காதல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் விக்கிக்கு முத்த மழை பொழிந்த ரொமான்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஹேப்பி பர்த்டே மை எவ்ரிதிங். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன். “உயிர், உலகம் போல உங்களுக்கு அனைத்தும் கிடைக்கனும் ” என காதல் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2015-ல் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மலர்ந்த காதல், சில வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இருவரும் 2021-ல் ஒரு தனிப்பட்ட விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், 2022-ல், நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சென்னையில் ஒரு பிரமாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த உடனேயே, இந்த ஜோடி 2022 அக்டோபரில் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட ஆண் குழந்தைகளை வரவேற்று உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்ததாக அறிவித்தனர். அடிக்கடி தங்களது மகன்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…