ஆஸ்கார் விருது விழாவில் “நாட்டு நாட்டு” பாடல் ..உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Default Image

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்  “ஆர்ஆர்ஆர்”. தெலுங்கு, தமிழ், இந்தி , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று உலக அளவில் ரூ.1800 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

RRR
RRR [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்த நிலையில், பல விருதுகளையும் குவித்து வருகிறது, அந்த வகையில். ஆஸ்கார் விழாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “நாட்டு நாட்டு” பாடல் பாடப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Naatu Naatu
Naatu Naatu [Image Source : Google ]

மேலும், இந்த செய்தி இந்திய ரசிகர்களையும், படக்குழுவையும், சந்தோஷமடைய செய்துள்ளது. மேலும், 95வது ஆஸ்கார் விழா வருகின்ற 13-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல இந்திய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Golden Globe Award
The song ‘Nattu Nathu’ won the Golden Globe Award for Best Original Song. [Image Source : instagram/ranadaggubati]

எனவே, இந்த விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் பாடவுள்ளனர்.  ஏற்கனவே, இந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்