#NationalFilmAwards2023: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு!
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இதில், புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சிறந்த பாடல்கள் பிரிவில், புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல், வி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான புஷ்பா படத்தின் பாடல்கள் அனைத்தும் உலகம் முழுவதும் பிரபலமானது.
குறிப்பாக ஸ்ரீவள்ளி பாடல் மற்றும் ஊ சொல்றியா மாமா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருந்தார். தற்போது, புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்புஷ்பா பாகம் ஒன்று திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.