Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குனரும், நடிகருமான அமீர் இயக்கத்தில் உருவான ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார் என தெரிய வந்துள்ளளது.
இந்நிலையில், அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் இன்றைய தினம் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ள தயார் என்று அமீர் தெரிவித்த நிலையில், தற்பொழுது டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் ஆஜராகினார். விசாரணைக்கு ஆஜராகிய அமீரிடம் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…