நடிகர் நெப்போலியன் பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், சீவலப்பேரி பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக நடித்ததன் மூலம் அவருக்கு இது திருப்புமுனை படமாக அமைந்தது.
வெளிநாட்டில் செட்டிலாகி வாழ்ந்த வந்த இவர் சமீப காலமாக தமிழ் படங்களில் நடிப்பது குறைவு. கடைசியாக இவர் அன்பறிவு படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார். அதன் பின், சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவில் பிசினஸ் செய்து கொண்டு அங்கையே செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில், நெப்போலியன் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். நெப்போலியன் தனது பிறந்தநாளில் கலந்துகொள்ள தமிழ் சினிமாவில் இருந்து பலரை அழைத்திருந்தார். அதன்படி, பலரும் அமெரிக்காவில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் கலந்த கொண்டு விழாவை சிறப்பத்தினர்.
பலர் இவரது அழைப்பிதழை ஏற்று கொண்டு, அவருக்கு சர்ப்பர்ஸ் கொடுக்கும் வகையில், அவருக்கு தெரியாமலே விழாவில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.
இவர் ஏன் அமெரிக்காவில் குடியேறினார்? இப்போ அங்க எண்ணலாம் செய்கிறார் என்று தெரியுமா?
அவர் அமெரிக்காவில் குடியேறியதற்கு காரணம் அவரது மகன் தனுஷ். நெப்போலியன் ஜெயசுதா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சைக்கு அமெரிக்கா சென்று குடியேறினார்.
இப்பொது, நெப்போலியன் அமெரிக்காவில் ஒரு IT நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் யாரும் செய்யாத இந்த தொழில் முறையை 23 வருடமாக செய்து வருகிறார் நம்ம நெப்போலியன். நெப்போலியன் அமெரிக்காவில் ஏக்கர் கணக்கில் விவசாயப் பண்ணையையும் வைத்திருக்கிறார்.
உதவி கேட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஆர்.ராதா!
மேலும் அவர் நடத்தி வரும் ஐடி நிறுவனம் மற்றும் விவசாயம் மூலம் கோடிக்கணக்கில் வருமானமும் ஈட்டி வருகிறார். இவ்வாறு ஒரு அமெரிக்கா விவசாயியாக அமெரிக்காவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். அமெரிக்காவில் உள்ள அவரது வீடு அரண்மனை போன்று தன் மகனுக்காக பக்குவமாக செத்துக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
அவரது மகன் தனுஷ் நடக்க முடியாது என்பதால், அவர் வீட்டின் எல்லா பகுதிக்கும் தாராளமாகச் செல்ல பிரத்யேகமாக லிப்ட்களை ஏற்பாடு செய்து கட்டியுள்ளார். இளைய மகன் கூடைப்பந்து விளையாடுவதில் விருப்பம் கொண்டவர் என்பதால், அவருக்கென கூடைப்பந்து வீடு உள்ளே கட்டிருக்கிறார்.
காதலில் விழுந்த ரம்யா பாண்டியன்? வசமா சிக்கிட்டிங்களே மேடம்!
இது தவிர, குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்பதற்கு மினி தியேட்டர் உள்ளது. மது அருந்தாத நெப்போலியன், அவரது விருந்தினர்களுக்காக மது பாட்டில்கள் நிறைந்த அறையை பிரத்தியேகமாக காட்டியுள்ளார். மேலும், நெப்போலியனின் வீட்டில் மொத்தம் 4 சொகுசு கார்கள் உள்ளன. இப்படி அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…