கடந்த இரண்டு வருடங்களாக நடிகை சமந்தாவுக்கு நல்ல நேரமே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2017-ல் திருமணம் செய்துகொண்ட தனது முன்னாள் கணவரான நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக சமந்தா அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும், சமீபத்தில் கடுமையான மயோசிடிஸ் என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இப்பொது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். இந்த நிலையில், நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா டேட்டிங் பற்றிய செய்திகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த வதந்திகளுக்கு சமந்தா பதிலளித்ததாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இந்த செய்தி வைரலானவுடன், சமந்தா அதை மறுத்து, தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்திய ஒரு ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்த சமந்தா, “யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில் மூழ்கி விடுவார்கள். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என்று கூறினாராம்.
ஆனால் தற்போது இது குறித்து சமந்தா, நான் இது போன்ற கருத்து எதுவும் கூறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். சமந்தா தனது ட்விட்டரில், அந்த செய்தியை ரீ ட்விட் செய்த்து “நான் இதை ஒருபோதும் சொல்லவில்லை” என்ற குறிப்பிட்டு இருக்கிறார்.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…