ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அவருடன் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று கொண்டு இருந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் முன்னதாக வைரலாகி கிசு கிசுவை கிளப்பி இருந்தது. அப்படி இருந்தாலும் கூட இருவரும் டேட்டிங்கில் இருப்பதை எப்போதுமே உறுதிப்படுத்தவில்லை.
இந்த சூழலில், திடீரென நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா இருவரும் ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல் என்ற காரணத்தால் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டது. இருப்பினும்,பல ரசிகர்கள் அதிகாரப்பூர்வமாக இதனை பற்றிய அறிவிப்புக்காக காத்திருந்தார்கள்.
இதனையடுத்து இருவருக்கும் நிச்சியதார்தம் முடிந்தது பற்றி நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துளிபாலுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அவளை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக!8.8.8 எல்லையற்ற அன்பின் ஆரம்பம்” என கூறியுள்ளார்.
விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது . மேலும், நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…