வாத்தி திரைப்படத்தின் “நாடோடி மன்னன்” பாடல் வெளியீடு.!
தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “வாத்தி” இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான ‘வா வாத்தி’ பாடல் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று , பலருடைய பேவரைட் பாடலாக மாறியிருந்தது.
இதனை தொடர்ந்து படத்திற்கு இரண்டாவது பாடல் நாடோடி மன்னன் எனும் பாடல் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுத அந்தோணி தாசன் தனது கந்த குரலால் பாடியுள்ளார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.
Team #Vaathi is extremely humbled to dedicate #NaadodiMannan to the beloved ‘Vaathiyaar’ MGR sir on his birth Anniversary❤️
????@anthonydaasan
????️#Yugabharathi@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @vamsi84 @dopyuvraj @NavinNooli @vamsi84— G.V.Prakash Kumar (@gvprakash) January 17, 2023