என் வாக்கு போடப்பட்டு விட்டதாம்..!ஆனா நா இப்ப தானே வரேன்..! நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி..!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.
நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, நடிகர் மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் தேர்தல் அதிகாரிகளுடன் நடிகர் மைக் மோகன் வாக்குவாதம் செய்தார் நான் இப்பொழுது தானே வருகிறேன் எப்படி வாக்களிக்க முடியும் என்று கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.