பொன்னியின் செல்வனுடன் மோதும் நானே வருவேன்.?!
அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் மணிரத்தனம் இயக்கியுள்ளார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதே தினத்தில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் திரைப்படமும் வெளியாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் அணைத்து முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்துடன், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளதாம். ஒரே தினத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியானால் எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என ரசிகர்கள் இப்போதே கணக்கு போடா ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், பொன்னியின் செல்வன் படம் பிரமாண்டமாக உருவாக்கப்ட்டுள்ளது என்பதாலும், படத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளதால் இரண்டு படமுமும் ஒரே தினத்தில் வெளியானால், பொன்னியின் செல்வன் படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.