நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம், ஜனவரி 14 ஆம் தேதி சங்கராந்திக்கு திரையரங்குகளில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
நாகார்ஜுனா மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, இப்படம் OTT-ல் ஸ்ட்ரீம் செய்ய தயாராக உள்ளது.
செம டிவிஸ்ட்! வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ்?
பிப்ரவரி 17 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) OTT தளத்தில் வெளியாகிறது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் ஆகும்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…