கதையை கேட்டு மிரண்டுட்டான்.! சிம்புவை ஒருமையில் பேசி வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்.!

சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம்.
ஒரு சிலர் மட்டுமே தனது நண்பர்களை எப்படி வெளியில் அழைகின்றோமோ அதேபோல மேடையிலும் அழைத்து பேசுவார். அதில் ஒருவர்தான் இயக்குனர் மிஸ்கின் தான். எப்படி மற்றவரிடம் பேசுகிறோமோ அதையே மேடைகளிலும் பேட்டிகளிலும் பேசி விடுகிறார்.
மிஸ்கின் ஒரு பேட்டியில் பேசும்போது சிம்பு படத்தை இயக்குவது உண்மைதானா என்பது போல அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் சற்றும் யோசிக்காமல், ‘சிம்புவிடம் நான் கதை கூறிவிட்டேன். அவன் இந்த கதையை கேட்டு மிரண்டு விட்டான்.’ என தெரிவித்துவிட்டார். நெருங்கிய நடிகரை பேசும்போது மரியாதையாக பேச வேண்டும் என சிலர் இருப்பர் ஆனால் தான் எப்படி அவரிடம் பேசினோமோ அதையே பொது வெளியிலும் பேசி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக, வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதற்கடுத்ததாக சிம்பு, இயக்குனர் ராம், மிஸ்கின், சுதா கொங்காரா ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார் என பட்டியல் நீண்டு செல்கிறது. இதில் யாரை தேர்வு செய்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.