முக்கியச் செய்திகள்

Mysskin : உங்களை திட்டணும்னா நேராவே திட்டுவேன்! சேரனை முகம் சுழிக்க வைத்த இயக்குனர் மிஷ்கின்!

Published by
பால முருகன்

இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் சேரனை வைத்து யுத்தம் செய் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. வழக்கமாகவே மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிப்பவர்கள் அவருடைய படத்தில் நடிப்பது கஷ்டம் எனவும் படப்பிடிப்பு தளங்களில் கோபமாக நடந்து கொள்வார் எனவும் கூறியதை பார்த்திருப்போம்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிலருடன் மிஷ்கினுக்கு முரண்பாடும் ஏற்பட்டுள்ள தகவலை பலரும் கூறி நாம் பார்த்திருப்போம் . அப்படி தான் இயக்குனர் மிஷ்கினுக்கும்  இயக்குனர் சேரனுக்கும் ‘யுத்தம் செய்’ படப்பிடிப்பு சமயத்தில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யுத்தம் செய் படத்தின் படப்பிடிப்பின் போது தன்னுடைய உதவியாளர்களை மிஷ்கின் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தாராம்.

அந்த சமயம் இயக்குனர் சேரன் நான் பக்கத்தில் இருக்கிறேன் கொஞ்சம் பார்த்து திட்ட சொல்லுங்கள் என கூறினாராம். அதனை போய் அந்த உதவி இயக்குனர் மிஷ்கினிடம் கூற அதற்கும் சேர்த்து அந்த உதவியாளரை அவர் திட்டினாராம். பிறகு மிஷ்கின் நேராக சேரனிடம் சென்று அண்ணா நான் உங்களை திட்டவில்லை, அப்படி உங்களை திட்ட வேண்டும் என்றால் நான் சுற்றி எல்லாம் திட்ட மாட்டேன் உங்களிடமே நேரா வந்து திட்டுவேன்.

உங்களுக்கு திட்டு இருக்கிறது என்றால் கண்டிப்பாக நான் திட்ட தான் செய்வேன் . மற்றபடி எனக்கு பின்னாடி பேசி எல்லாம் பழக்கம் இல்லை என்பது போல கூறினாராம். இதனால் சேரன் முகம் சுழித்து கொண்டாராம். பிறகு படம் வெற்றியடைந்த பின் மிஷ்கின் தன்னுடைய உதவி இயக்குனர்கள் அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி வைத்து மது குடித்துக் கொண்டு நடனம் ஆடினார்களாம்.  அந்த பார்டிக்கு சேரனையும் அழைக்க அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களுடன்  வருகை தந்தாராம்.

குடித்துவிட்டு நடனம் ஆடி கொண்டிருந்த மிஷ்கின் மற்றும் அவருடைய உதவி இயக்குனர்கள் ஆகியோரை பார்த்த சேரனுக்கு அதிர்ச்சியாக   என்ன இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? என்பது போல அரண்டு போய் கேட்டாராம். பின் மிஷ்கின் வாங்க அண்ணா  மது குடிங்க என கேட்டுக்கொண்டாராம்.  அதற்கு சேரன் ‘நான் குடித்து பழக்கம் இல்லை குடிக்க மாட்டேன்’ என மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு படத்தை பார்த்துவிட்டு அந்த எமோஷனலில் இயக்குனர் மிஷ்கினை  சேரன் கட்டி அணைத்துக் கொண்டாராம். இந்த தகவலை இயக்குனர் மிஷ்கினே  சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 minutes ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

50 minutes ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

1 hour ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago