மிஷ்கின் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் துல்கர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் ஹீரோக்களை மையப்படுத்தியே படம் வெளியாகும். வரும் ரசிகர்களும் எந்த ஹீரோ படம் என பார்த்து படத்திற்கு வந்தனர். அப்படி இருக்கையில், சில நல்ல திறமையான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்த பின் இந்த இயக்குனர் படம் என்றால் போகலாம் என மனநிலைக்கு ரசிகர்கள் தற்போது மாறிவிட்டனர்.
அப்படி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதை அமைத்து, தனது கதைக்கு ஏற்ற நாயகர்களை தேர்வு செய்து முழுக்க முழுக்க இயக்குனர் படமாக மட்டுமே இருக்கும் வகையில் படம் எடுப்பவர்களில் முக்கியமானவர் மிஷ்கின்.
அவர் இயக்கத்தில் அடுத்து பிசாசு-2 வெளியாக இருக்கிறது. அதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று ரிலீசுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தை அடுத்து மிஷ்கின் யாரை இயக்க போகிறார் என எதிர்நோக்கி காத்திருக்கையில், மிஷ்கின் பாலிவுட் பக்கம் செல்கிறார் என்ற பதில் கிடைத்துள்ளது. அதுவும், துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து ஹிந்தி படம் இயக்க உள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கரின் துறுதுறு நடிப்பிற்கும் மிஷ்கினின் மாறுபட்ட இயக்கத்திற்கும் செட் ஆகும என பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…