மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் இறுதி மரியாதையை செலுத்தினார்.
மறைந்த பிரபல காமெடி நடிகரான மயில்சாமி உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்திவந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்த 57 வயதான நகைச்சுவை நடிகர் மயில்சாமி, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்த மயில்சாமி, தனது தனித்திறமையுடன் தமிழ் சினிமாவில் அறியப்பட்டார். அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினிகாந்த், மயில்சாமி எனது நீண்டகால நண்பர். சிவனின் மிகப்பெரும் பக்தரான அவரை, சிவராத்திரி அன்று சிவன் அழைத்துக்கொண்டார்.
மயில்சாமி தனது கடைசி ஆசையாக, சிவனுக்கு ரஜினி பாலபிஷேகம் செய்யவேண்டும் என சிவராத்திரியன்று இசைக்கலைஞர் சிவமணியிடம் தெரிவித்திருப்பதாக, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, மயில்சாமியின் கடைசி ஆசையை தான் நிறைவேற்றி வைப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…