எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள்! பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசியாவை சேர்ந்த முகன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்துள்ளார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது இணைய பக்கத்தில் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், கவின் மற்றும் தர்சனுடன் இணைந்து எடுதத புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள் என பதிவிட்டுள்ளார்.