கடைசி மரியாதையாய் என் வணக்கங்கள் அவருக்கு! நடிகர் இர்பான் கான் மறைவுக்கு இயக்குனர் சேரன் ட்வீட்!
நடிகர் இர்பான்கான் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல்.
நடிகர் இர்பான் கான் பிரபாலாமான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகராவார். இவர் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஹிந்தியில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர்தான் இர்பான்கான். இவரது நடிப்பு என்பது நம்மால் யூகிக்க முடியாதபடி அதே நேரம் வேறுபட்டதாக சிறப்பாக இருக்கும். சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இன்று நிரந்தர ஓய்வு. கடைசி மரியாதையாய் என் வணக்கங்கள் அவருக்கு!’ என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர்தான் இர்பான்கான்.. இவரது நடிப்பு என்பது நம்மால் யூகிக்க முடியாதபடி அதே நேரம் வேறுபட்டதாக சிறப்பாக இருக்கும்… சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.. இன்று நிரந்தர ஓய்வு..
கடைசி மரியாதையாய் என் வணக்கங்கள் அவருக்கு… pic.twitter.com/0dpBdqIJ3I— Cheran (@directorcheran) April 29, 2020