தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ராஜேந்திரன், இறைவன் அருளால் சீக்கிரம் நடைபெறும் என்றும் இது தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாம் இறைவன் மீதும் விதியின் மீதும் தான், கேள்வி கேட்பது உங்களது கடமை, பதில் கூறுவது என்னுடைய கடமை. ஆனால், பதில் கூற முடியாமல் போவது என்னுடைய சூழ்நிலை என கண்ணீர் கசிந்த கண்களுடன் பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…