என்னுடைய வாழ்க்கையே இப்போ வேற…”லவ் டுடே” இவானா நெகிழ்ச்சி பேச்சு.!
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படம் 100 நாட்களை கடந்த நிலையில், நேற்று சென்னையில் கொண்டாட்ட விழா ஒன்று நடைபெற்றது.
இந்த விழாவில், பிரதீப்,இவானா, யுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இயக்குனர் மோகன் ராஜ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய நடிகை இவானா ” இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த வரவேற்பு ரொம்பவே பெருசு. இப்போது என்னுடைய வாழ்க்கையே வேறுமாதிரி செல்கிறது.
இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழு அனைவர்க்கும் நன்றி. படத்தின் தயாரிப்பாளர்கள் அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் இருவரும் என்னிடம் காண்பித்த அன்பு ரொம்பவே பிடித்திருந்தது. படத்தில் பல சத்யராஜ் சாருடன் நடித்ததன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டே” என இவானா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் இவானா தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தோனி தயாரிக்கும்