என் மானம் போச்சு.. மரியாதை போச்சு… இயக்குனர் செயலால் புலம்பும் பிரபல நடிகை.!
நடிகை மஹிமா நம்பியார் தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் “ரத்தம்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மஹிமா நம்பியார் தூங்குவதை புகைப்படம் எடுத்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “கடின உழைப்பு என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
It’s not just the #Ratham crew that’s hardworking, members of the cast are equally committed. Here’s @Mahima_Nambiar learning her lines with intensity. #ThailandDiaries pic.twitter.com/SHSuK2GVDj
— CS Amudhan (@csamudhan) October 7, 2022
இதனை பார்த்த நடிகை மஹிமா நம்பியார் சற்று ஷாக்காகி ” அட கடவுளே… மானம் போச்சு..மரியாதை போச்சு.. இந்த பதிவுக்கு அப்புறம் நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை. இது சீட்டிங். எங்கே தயாரிப்பாளரின் கடின உழைப்பு புகைப்படம்?” என குறிப்பிட்டுள்ளார்.
My god !!Asingam of the decade???????????????? I don’t want to go back to India after this post ????
This is cheating ! Where is the hard working producer’s pic ? @bKamalBohra— Mahima Nambiar (@Mahima_Nambiar) October 7, 2022
மேலும் நடிகர் விஜய் ஆண்டனியும் தனது ட்வீட்டர் பக்கத்தில் “அவங்க கடின உழைப்பு பன்றத பாக்கும் போது.
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு” என ஜாலியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு???? https://t.co/NY2pVlPWoI— vijayantony (@vijayantony) October 7, 2022