பாபா படத்தோட என்னுடைய கேரியர் முடிந்தது…மனம் திறந்த நடிகை மனிஷா கொய்ராலா.!
ஒரு காலத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. பாபா திரைப்படம் தான் என்னுடைய கடைசி தென்னிந்திய படம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சற்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய நடிகை மனிஷா கொய்ராலா ” ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாபா திரைப்படம் தான் என்னுடைய கடைசி தென்னிந்திய படம். அந்த திரைப்படத்தோடு என்னுடைய திரை வாழ்க்கையே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்ததால் அதோடு சேர்ந்து என்னுடைய திரை வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
அந்த படத்திற்கு பிறகு எனக்கு பெரிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. 20 ஆண்டுகள் கழித்து பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. நானும் பார்த்தேன்” என அவர் கூறியுள்ளார்.
மேலும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாபா. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.