ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மற்றோரு ஹீரோயினாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரிப்தி டிம்ரி மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருடைய கதாபாத்திரம் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வந்தாலும் மற்றோரு புறம் அவர் ஆடை இல்லாமல் நடித்த காட்சி சற்று பேசும் பொருள் ஆகவும் மாறியுள்ளது. இதனையடுத்து, படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று தான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை எனவும் ஆடை இல்லாமல் நடித்தால் தவறு என்று எல்லாம் இல்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஜோயா கதாபாத்திரத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், அதே சமயம் ஹீரோ ரன்பீர் கபூருடன் படுக்கையறை காட்சி பற்றி பலரும் பேசி வருகின்றனர். சொல்லப்போனால் , புல்புல் படத்தில் வரும் கற்பழிப்பு காட்சி இந்தக் காட்சியை விடக் மிகவும் கடினமான ஒன்று. இதனை நான் ஒரு நடிகையாக சொல்லவில்லை பெண் ஆகா சொல்கிறேன்.
பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!
என்னை பொறுத்தவரை அனிமல் திரைப்படத்தில் நான் அப்படி நடித்தது பெரிய விஷயமில்லை. ஒரு நடிகையாக என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் நான் செய்து கொடுத்து ஆகவேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் அது நியாயம். எனவே, படத்திற்கு அப்படி தேவை எனவே அந்த காட்சியில் ஆடை இல்லாமல் நடிப்பது என்னை பொறுத்தவரை தவறு என்பது இல்லை.
அந்த காட்சியை படமாக்கும் போது அன்று நான்கு பேர் மட்டுமே செட்டில் இருந்தனர். நான், ரன்பீர், சந்தீப் ரெட்டி மற்றும் கேமராமேன் மட்டும்தான் இருந்தோம். வேறு யாரும் இல்லை. 5 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களுக்கு எதுவும் பிரச்னையாக இருக்கிறதா? நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். எனவே, என்னை பொறுத்தவரை அந்த மாதிரி காட்சி படத்திற்கு தேவை என்றால் இன்னும் பல படங்களில் நான் நடிப்பேன்” எனவும் நடிகை திரிப்தி டிம்ரி தெரிவித்துள்ளார்.