நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரன் கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்து, விஜய் சேதுபதி அவர்கள் கூறுகையில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாகவும், முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும் என்றும், அதனை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கிரிக்கெட் வீரர் முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழிநடாத்தவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாகவும், என் மீது நம்பிக்கை வைத்த முரளிதரனுக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…