அந்த ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை… கையில் பட்டாக்கத்தி.! முகத்தில் வில்லத்தனம்.! சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ வீடியோ…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Muthuvel Pandian has arrived! ????
Happy Birthday Superstar Rajinikanth▶️ https://t.co/bgJJsrd44Q @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth
— Sun Pictures (@sunpictures) December 12, 2022
அதன்படி, தற்போது சிறப்பான ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ரஜினி மிரட்டலான லுக்கில் கையில் பட்டாகத்தி எடுக்கிறார். இதன் மூலம் படத்தில், அவர் ஒரு வார்டானாக நடிக்கிறார் என தெரிகிறது. பிறகு எப்படி சண்டைகளில் ஈடுபடுகிறார் என்பது தான் கதை என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் முத்து வேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படியுங்களேன்-எல்லை மீறிய ப்ரோமோஷன்! இதுக்காக தான் முத்தம் கொடுத்தேன்…விளக்கம் கொடுத்த இயக்குனர்.!
இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.