பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகி உள்ள முத்துக்குமரன், அரசு பள்ளிகளுக்கு உதவ உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

muthukumaran bigg boss

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் நேற்று (ஜனவரி 19) நிறைவடைந்தது.மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் முத்துக்குமரன், ராயன், பவித்ரா, விஷால், சவுந்தர்யா ஆகிய 5 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்வாகினர்.

இறுதியில் பிக் பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். 2வது இடத்துக்கான வெற்றியாளராக சவுந்தர்யா தேர்வானார். 3வது இடத்தில விஷாலும், 4வது இடத்தில் பவித்ராவும், 5வது இடத்தில் ராயனும் தேர்வாகினர்.

இந்நிலையில், போட்டியில் வெற்றிபெற்ற  முத்துகுமாரனுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை பற்றிய விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி,  போட்டியில் டைட்டிலை வென்ற முத்துகுமரனுக்கு ரூ.40 லட்சம் 50,ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுபவர்களுக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். ஆனால், இந்த முறை குறைத்து தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது, பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டு பரிசு பெட்டியில் எடுக்கப்படும் பணம் 50 லட்சத்தில் இருந்து குறைத்து தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  எனவே, பணப்பெட்டி டாஸ்கின் போது முத்துக்குமரன் ரூ,50,000 எடுத்திருந்தார். விஷால் 5 லட்சமும், ரயான் மற்றும் பவித்ரா தலா 2 லட்சங்கள் எடுத்திருந்தனர்.

இதனால் 40 லட்சத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் போக மீதம் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை என கூறப்பட்டது. எனவே, போட்டியில் வெற்றிபெற்ற முத்துகுமரனுக்கு பணப்பெட்டி டாஸ்கில் வெற்றிபெற்ற ரூ.50,000 சேர்த்து ரூ. 41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றிபெற்ற பணத்தில் சொந்தமாக வீடு கட்ட ஆசைப்படுவதாகவும், அரசு பள்ளிகளுக்கு உதவ உள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேலும், இதைத்தவிர போட்டியாளர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. அதன்படி, கேப்டன் ஆஃப் தி சீசன் எனும் விருது தீபக்கிற்கு வழங்கப்பட்டது.  எந்த இடத்தில் பேச வேண்டும் என சரியாக பேசி விளையாடிய ஆனந்திக்கு மாஸ்டர் ஸ்ட்ராடஜிக் விருது வழங்கப்பட்டது.  மஞ்சரிக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.  அட்டென்ஷன் சீக்கர எனும் விருது ராணவ்-விற்கு வழங்கப்பட்டது. இறுதி போட்டி வரை முன்னேறிய ஜாக்குலினுக்கு சூப்பர் ஸ்ட்ராங்க் விருது வழங்கப்பட்டது.  அதே போல இறுதி போட்டியில் 5வது இடம் பிடித்த ராயனுக்கு டாஸ்க் பீஸ்ட் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur