நயன்தாராவை நேரில் கூட பார்க்கல! ஒரு வார்த்தை பாட்டு போட்டவருக்கே இந்த நிலைமையா?
Nayanthara : நயன்தாராவை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை என இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகை என்றால் நயன்தாரா தான். தற்போது திருமணம் முடிந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் கூட அவருடைய மவுசு மட்டும் குறையவே இல்லை. படங்கள் தோல்வி அடைந்து அவருடைய சம்பளம் படத்திற்கு படம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு ஆரம்ப காலத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் பாடல் பெரிய வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் தான் நயன்தாரா சினிமாவில் நடிக்கவே ஆரம்பித்தார் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் பாடல் நயன்தாராவை மிகவும் பிரபலமாக்கியது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் எல்லாம் டிவி சேனல்களில் அந்த பாடல் தான் ஓடிக்கொண்டு இருக்கும். அந்த பாடலை வைத்து தான் நயன்தாராவின் பெயரையே வெளியே தெரியவந்தது.
இப்படியான பெரிய அறிமுக பாடலை நயன்தாராவுக்காக கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ் இன்னுமே நயன்தாராவை ஒரு முறை கூட நேரில் பார்க்கவே இல்லயாம். இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நயன்தாரா இவ்வளவு பெரிய நடிகையாக வளருவார் என்று நினைக்கவே இல்லை. அந்த பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அவர் சினிமா துறைக்கு வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. நான் இன்னும் அவரை நேரில் கூட பார்க்கவில்லை” என கூறிஉள்ளர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சினிமாவில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.