யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம்.
எனவே, பாடல் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் யூடியூபிலும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடல் பிடிக்காத விஜய் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவை ட்ரோல் செய்தனர். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு முடங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யுவன் சங்கர் ராஜா விசில் போடு பாடல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதன் காரணமாக தான் தனது இன்ஸ்டா கணக்கை Deactivate செய்து விட்டதாக கூறி ட்ரோல் செய்து வருகிறார்கள்.
உண்மையில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா கணக்கை deactivate செய்துவிட்டாரா அல்லது வேறு யாரும் ஹக் செய்துவிட்டார்களா? என்பது பற்றி அவரே அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்தால் மட்டும் தான் தெரிய வரும். ஏனென்றால், எக்ஸ் வலைத்தளத்தில் யுவனின் அதிகாரப்பூர்வ கணக்கு அப்படியே தான் இருக்கிறது. இருந்தாலும், விசில் பாடல் வெளியான சமயத்தில் இப்படி நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…