அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!

harshavardhan and vidyasagar

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்ததும் அவர்களை மக்கள் சரியாக கொண்டாடாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பெரிய அளவில் வெளியே தெரிந்தாலும் கூட, அவர்களுடைய பெயர் பெரிய அளவிற்கு வெளிய தெரிந்தது இல்லை. அப்படி தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட, இவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

இவர் இசையமைத்த சந்திரமுகி, அன்பே சிவம், பூவெல்லாம் உன் வாசம், கில்லி ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் அந்த சமயம் எல்லாம் பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் மட்டுமில்லாமல் இப்போது கூட இவர் இசையமைத்திருந்த பாடல்கள் எல்லாம் இப்போதும் பலரும் கேட்டு ரசித்து வருகிறார்கள்.

இருந்தாலும், இசையமைப்பாளர் வித்யாசாகரை பெரிய அளவில் மக்கள் கொண்டாடவில்லை. இதனை அவருடைய மகனும் பாடகருமான ஹர்ஷ வர்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஹர்ஷ வர்தன் ” நான் மகனாக இல்லாமல் ஒரு ரசிகராக சொல்லவேண்டும் என்றால் மக்கள் அப்பாவை சரியாக கொண்டாடவில்லை.

என்னுடைய அப்பாவுக்கு இருக்கும் அந்த இசை குறித்த அறிவு எல்லாம் எங்களுடைய குடும்பத்திற்கு தெரியும். ஆனால், மக்களுக்கு தெரியவில்லை. அப்போது மட்டுமில்லை இப்போதும் தான். அவர் இசையமைத்து கொடுத்திருந்த ஹிட் பாடல்களை வைத்து தான் அவர் யார் என்று மக்களுக்கு தெரிகிறது. இதன் காரணமாக தான் நான் அப்பாவுடைய பழைய பாடல்களை திரும்பவும் என்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், ஹர்ஷ வர்தன் தொடர்ச்சியாக தன்னுடைய தந்தையின் பாடல்களை பாடி வீடியோவை வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்களாக சென்னையில் பிரமாண்டமாக இசைக்கச்சேரியை இசையமைப்பாளர் வித்யாசாகர் நடத்தினார். அவருடைய இசை கச்சேரியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்