பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.
தங்கை பவதாரிணியின் இழப்பால் மிகுந்த வருத்தம்: நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி
பிறகு, பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவருடைய உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவரது உடல் தேனி வந்தது.பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தற்போது அவருடைய உடலுக்கு குடும்பத்தினர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இன்னும் சில நேரங்களில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இளையராஜா தனது மகளின் உடலை பார்த்து சற்று வேதனையுடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குனர் பாரதி ராஜாவும் கண்ணீருடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…