ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து மனம் திறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.!!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
படத்தில் அவருடைய இசையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம் அந்த அளவிற்கு அருமையாக இசையமைத்திருப்பார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு ரசிகராக எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. அதில் தனுஷ் நடிப்பதாக அறிவித்துள்ளனர். என்னிடம் படத்தை பற்றி பேசினார்கள். ஆனால் கதை இன்னும் கூறவில்லை.
செல்வராகவன் சார் என்னிடம் கதையை கூற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக கேள்விப்பட்டேன். ரசிகர்ளை போலவே நானும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்” என கூறியுள்ளார்.