சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இந்த சூழலில் இவர்கள் இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி தனியாக பிரிந்து தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களாம். எனவே, விவாகரத்து பெற்று பிரிந்துவிடலாம் என்கிற முடிவை இருவரும் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரவிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனை தானாம்.
ஒரு சண்டையின் போது இரு வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தால் சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி பிரகாஷ்க்கும் சைந்தவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதன் காரணமாக தான் கடந்த 6 மாதங்களாக இருவரும் தனி தனியாக வசித்து வருகிறார்களாம்.
எனவே, இருவரும் கலந்து பேசி திருமண உறவை முறித்து கொண்டு விவாகரத்து பெற்று கொள்ளும் முடிவிற்கு வந்துவிட்டதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் உண்மையானதா இல்லையா என்பதனை ஜிவி பிரகாஷ் அல்லது சைந்தவி விளக்கம் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…