bhavatharini [File Image]
பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககன வெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இதயம் நொறுங்கி சொல்றேன் – கண்ணீர் ததும்ப நடிகர் வடிவேலு இரங்கல்!
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதனையடுத்து பவதாரிணி உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. இந்த இறுதி சடங்கில் பல்வேறு பிரபலங்கள் வருகை தனது தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தவுள்ளனர்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…