ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல்!
ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், மக்கள் யாரும் வெளியே வர இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை துவங்கியுள்ள நிலையில், ஊரடங்கால் முஸ்லீம் மதத்தினர் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இதனையடுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 4 நிமிட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள ‘யா நபி’ என்ற பாடலில், முகம்மது நபி குறித்த வாழ்த்து இடம்பெற்றுள்ளது. ரமலான் பாண்டியை முன்னிட்டு யுவன் வெளியிட்டுள்ள இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Unveiling #YaaNabi; My Islamic Indie song featuring Rizwan, Produced by @U1Records. Tune & Penned by Rizwan & Arranged by Yours Truly. Hope you all like it???? @divomovies
▶️https://t.co/yygV2btPtX— Raja yuvan (@thisisysr) April 26, 2020