தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார்.
இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றிபெற்று, விஜய்க்கு மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம். அந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து கத்தி, சர்கார் படத்தை இயக்கினார். இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியனார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.அடுத்தாக வெற்றியை கொடுத்தாகவேண்டும் என்ற நோக்கத்துடன், விஜயிடம் ஒரு கதை கூறியுள்ளார். ஆனால் விஜய்க்கு கதையின் இரண்டாவது பகுதி பிடிக்கவில்லை என்பதால் மறுத்துவிட்டாராம்.
இந்த நிலையில், மீண்டும் வெற்றியை கொடுக்கும் நோக்கில் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரிடமும் தனி தனி கதையை கூறியுள்ளாராம். இருவரில் யார் கால்ஷீட் கொடுக்கிறார்களோ அவரின் திரைப்படத்தை முதலில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளதால், எப்போது கால்ஷீட் கொடுப்பார்கள் என்று சரியாக தெரியவில்லை. கால்ஷீட் கொடுத்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…