சினிமா

மாநகரம் பண்ணும் போது ரொம்ப கெட்டப்பேரு! நடிகர் முனீஸ்காந்த் வேதனை!

Published by
பால முருகன்

நடிகர் முனீஸ்காந்த் நடிக்கும் படங்களில் அவருடைய காமெடி எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை. அவர் தனக்கு ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாழும் அதில் எந்த அளவிற்கு நிஜமாக நடித்து மக்களை சிரிக்க வைக்க முடியுமோ அதே அளவுக்கு நடித்து சிரிக்க வைத்துவிடுவார். அதில் இவருடைய நடிப்பை வெளிக்காட்டிய படங்கள் என்றால் முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், மாநகரம் ஆகிய படங்கள் என்று கூறலாம்.

இதில் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த முடித்த பிறகு எல்லாம் அவருக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்தது என்றே கூறலாம். எனவே, அந்த சமயம் இப்படி தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்ததால் சில இயக்குனர்களுக்கு முனீஸ்காந்த்தால் கால்ஷீட் கூட கொடுக்கமுடியவில்லையாம். இதனால் இவர் கால்ஷீட் சரியாக கொடுக்கமாட்டிக்கிறார் என்ற கெட்ட பெயரும் அந்த சமயம் இவருக்கு வந்ததாம்.

11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!

இந்த தகவலை முனீஸ்காந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு மற்றோரு அடையாளத்தை கொடுத்த திரைப்படம் என்றால் மாநகரம் படத்தை நான் சொல்வேன். முண்டாசுப்பட்டி படம் எந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்ததோ அதே அளவிற்கு இந்த மாநகரம் படமும் கொடுத்தது.

முண்டாசுப்பட்டி படத்தில் நடித்து முடித்த பிறகு எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் சரியாக இயக்குனர்களிடம் கதைகேட்பதில்லை சரியாக கால்ஷீட் கொடுக்காமல் கறார் காட்டுகிறான் என்ற பேச்சு எழுந்தது. பசங்க 2 படத்திலும் எனக்கு கெட்டப்பேரு, அந்த சமயம் தான் லோகேஷ் கனகராஜ் என்னிடம் மாநகரம் படத்தின் கதையை கூறினார்.

படத்தின் கதையும் நன்றாக இருந்த காரணத்தால் நான் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால், நான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருந்தேன். அந்த நேரத்தில் ஒருமுறை என்னை லோகேஷ் கனகராஜ் பார்ப்பதற்காக வந்து இருந்தார். சார் என்ன சார் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துவிட்டு படப்பிடிப்பு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு நான் சார் எனக்கு ஏற்கனவே கெட்டப்பேரு எனவே நான் இப்போது கமிட் ஆகி உள்ள படங்கள் எல்லாத்தையும் முதலில் முடித்துவிடுகிறேன். அதன் பிறகு வேண்டுமானால் நடிக்கிறேன் இல்லை என்றால் நீங்கள் வேற நடிகரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினேன். ரொம்பவே அதிகப்பிரசங்கித்தனமாகவும் அவரிடம் பேசி விட்டேன் .

அவர் நினைத்திருந்தால் நான் பேசியதற்கு பிறகு வேறு நடிகரை வைத்து கூட படத்தை எடுத்திருக்கலாம் ஏனென்றால் அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும்.  ஆனால் லோகேஷ் கனகராஜ் அதனை செய்யாமல் கடைசிவரை எனக்காக காத்திருந்து என்னை நடிக்க வைத்தார் ” என்று முனீஷ்காந்த் கூறியுள்ளார்.

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

3 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

3 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

5 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago