முண்டாசுப்பட்டி தாத்தா நடிகர் மதுரை மோகன் காலமானார்.!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்த மதுரை மோகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் மதுரை மோகன்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை மோகன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!
மதுரை மோகன் மறைவு செய்தியை உறுதி செய்த முண்டாசுப்பட்டி நடிகர் காளி வெங்கட் தனது X தளத்தில், ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கு” என காளி வெங்கட் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் @dir_ramkumar அவர்களுக்கும் pic.twitter.com/2xYw8QDw1S
— Kaali Venkat (@kaaliactor) December 9, 2023
மதுரை மோகன் வினோதயா சித்தம், முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர், முந்தைய காலகட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்த பெரிய மருது மற்றும் தென்னவன், அஜித்தின் சிட்டிசன் ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.