நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து, ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், வனிதா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனே தனது ஆட்டத்தை துவங்கினார். அதில் முதன்முதலாக சிக்கிய பிரச்னை என்னவென்றால் முகன் மற்றும் அபிராமிக்கு இடையேயான காதல் தான்.
வனிதா அபிராமியிடம், முகனை பற்றி வெளியில் நடந்த விடயங்கள் எல்லாம் கூறியுள்ளார். இதன் காரணமாக முகன் மற்றும் அபிராமிக்கு இடையே பல பிரச்சனைகள் எழுந்தது. கடைசியில், இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்ளும் அளவிற்கு வந்தனர். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான வனிதா அபிராமிக்கு ஆதரவாக தான் இதுவரை பேசி வருகிறார்.
இதனையடுத்து, முகன்ராவின் நண்பன் ஒருவர் வனிதாவை மிகவும் மோசமான முறையில் திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், வெளியில் நடக்கும் எந்த விடயங்களையும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டுபோக கூடாது என்பது ஒரு விதிமுறை.
ஆனால், வனிதாவிற்கு முகனை பற்றி என்ன தெரியும். அவரை பற்றி இல்லாதவைகளையெல்லாம் அபிராமியிடம் கூறியுள்ளதாக இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…