Vijayakanth : விஜயகாந்த் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு உடல் எடை 8 கிலோ அதிகரித்தது என்று எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு விஷயம் அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை ஆற்றியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சாப்பாடு போட்டு சினிமா துறையிலும் சரி, மக்களிலும் சரி பலருடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் சாப்பாடு போட்டு உதவி செய்தது பற்றி பலரும் நெகிழ்ச்சியாக பேசுவது உண்டு.
அந்த வகையில், பிரபல நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேப்டன் பற்றி நான் என்ன சொன்னாலும் என்னுடைய வாயில் இருந்து தவறாமல் வரும் ஒரு வார்த்தை அவர் எனக்கு அம்மா என்பது தான். ஏனென்றால், ஒருவரை அதட்டி சாப்பிட வைக்கும் எண்ணம் அம்மாக்கு மட்டும் தான் வரும்.
நான் அம்மாவுக்கு பிறகு அப்படி அதட்டி சாப்பிட வைப்பதை கேப்டன் விஜயகாந்துடன் பார்த்தேன். படப்பிடிப்பு தளத்தில் நாம் சாப்பிட்டு விட்டு தான் சும்மாக நடந்து கொண்டு இருப்போம் அந்த சமயம் நம்மளை பார்த்துவிட்டார் என்றால் டேய் இங்க வா சாப்பிடு என்று கூறுவார். நான் இப்போது தான் சாப்பிட்டுட்டேன் என்று கூறினால் சாப்பாடு டா என்று அதட்டி என்னை சாப்பிட வைப்பார்.
அப்படி நான் சாப்பிட்டு ஒரு படத்தில் என்னுடைய உடல் எடை 8 கிலோ வரை அதிகரித்தது. இது உண்மையில் வார்த்தைக்காக சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன். இப்படியெல்லாம் அவர் என்னை பார்த்துக்கொண்டு காரணத்தால் தான் நான் எப்போதும் அவரை என்னுடைய அம்மா என்று கூறுகிறேன்” எனவும் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் எம்.எஸ்.பாஸ்கர் எங்க அண்ணா, நெரஞ்சா மனசு, கஜேந்திரா, பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…