எனக்காக ஷூட்டிங்கை நிறுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.! மனம் உருகிய M.S.பாஸ்கர்.!

vijayakanth-about-M.-S.-Bhaskar

நடிகர் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் பல நல்ல உதவிகளை செய்திருந்தார் . குறிப்பாக படப்பிடிப்பு தளங்களில் மற்ற நடிகர்களுக்கு சாப்பாடு போடுவது சாப்பாடு போட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பது என  விஜயகாந்த் பல உதவிகளை செய்து இருக்கிறார் . இந்த அளவிற்கு நல்ல மனிதரான விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவால் அடையாளமே தெரியாதபடி மாறி இருக்கிறார்.

இதனால பலரும் வேதனையில் ஒரு நல்ல மனிதருக்கு இந்த நிலைமையாய் என கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் பெருமையாக பேசி வருகிறார்கள். அவருடன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜயகாந்த் உடன் பல படங்களில் நடித்த பிரபல நடிகரான எம் .எஸ். பாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் மனம் திறந்து பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜயகாந்த் எனக்கு அம்மா அப்பா மாதிரி என்று நான் அடிக்கடி  சொல்ல காரணம் அவர் எனக்கு செய்த விஷயங்கள் தான்.படப்பிடிப்பு தளத்தில் நான் ஏதாவது செய்து கொண்டிருப்பேன் என்னை அழைத்து வந்து வா சாப்பிட வா என்று அழைத்து வயிறு நிறைய சாப்பாடு போட்டு அதனை பார்த்து அழகு பார்ப்பார்.

ஹிட் படத்தில் நடிக்க சம்பளம் வாங்காத விஜயகாந்த்! எந்த படத்துக்காக தெரியுமா? 

அந்த மாதிரி நல்ல மனம் கொண்டவர் தான் விஜயகாந்த். இப்படியான ஒரு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.ஒருமுறை அவருடன் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் அவர் சாப்பாடு போட்டதில் மட்டுமே என்னுடைய உடல் எடை 10 கிலோ வரை அதிகமாக  இருந்தது. அந்த அளவிற்கு எனக்கு சாப்பாடு போட்டு என்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டவர் நடிகர் விஜயகாந்த்.

சாப்பிட்டுவிட்டு என்னால் இப்படி சாப்பிட்டால் எப்படி நடிக்க முடியும்? என்று அவரிடம் ஒரு முறை கேட்டேன் அதற்கு உன்னை யார் இப்போது படப்பிடிப்புக்கு  வர சொன்னா? உனக்கு இப்போது காட்சிகள் எடுக்கப்பட வேண்டாம் நீ தூங்கிவிட்டு அதன் பிறகு வா அதன் பிறகு உனக்கு காட்சிகள் எடுக்கலாம் என்று கூறி எனக்காக ஷூட்டிங்கை நிறுத்தியவர் விஜயகாந்த் எனவும் நடிகர் எம் எஸ் பாஸ்கர் மனம் திறந்து பேசி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi