சீதா ராமம் திரைப்படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர் . இவர் சீதா ராமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதனையடுத்து, படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஹாய் நன்னா திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் போலவே நானும் பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். படத்தை பார்த்துவிட்டு நீங்கள் கொடுக்கும் வரவேற்பை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நான் சீதா ராமம் படத்தில் நடித்ததை போலவே நல்ல கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் சீதா கதாபாத்திரத்தை காதலித்ததைப்போல இந்த படத்திலும் என்னுடைய கதாபாத்திரத்தை காதலிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள் அணைத்து பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும்.
மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடுவது சவாலாக இருந்தது. அது என்ன பாடல் என்றால் இந்த ‘அம்மாடி..’ பாடல் தான். ஒவ்வொரு வார்த்தையும் சரியாக உச்சரித்து நான் செய்கை காட்டவேண்டும் நான் அதை மிகவும் சவாலாகக் கண்டேன். படத்தில் நடிக்கும்போது மற்ற காட்சிகள் கூட அந்த அளவிற்கு எனக்கு சவாலாக இருந்து இல்லை ஆனால், அந்த பாடல் காட்சி எடுக்கும்போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
என்னை பொறுத்தவரை சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களுக்கு என்னுடைய பெயர் நினைவில் இருக்கிறதா அல்லது இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் சீதா.. போன்ற கதாபாத்திரங்களில் மூலம் அவர்களுடைய நான் நினைவில் இருக்க வேண்டும். அதற்காக நேர்மையாக கடுமையாக உழைப்பேன்” எனவும் நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை மிருணாள் தாகூர் தெலுங்கில் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும், இந்தியில் பல படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…