வலியும் இல்ல உணர்ச்சியும் இல்ல…ரெட் லைட் பகுதிக்கு சென்று கதறி அழுத மிருணாள் தாகூர்!
Mrunal Thakur சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் கடைசியாக தெலுங்கில் ஹாய் நானா திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பேம்லி ஸ்டார் படத்திலும் நடித்து வருகிறார்.
read more- பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!
அதைப்போல ஹிந்தியிலும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகி நடித்து கொண்டு இருக்கிறார். அந்த ஹிந்தி படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் இதற்காக அவர் மும்பையிலுள்ள ரெட் லைட் பகுதி ஒன்றுக்கு சென்றாராம். அங்கு சென்று கதறி அழுத சம்பவத்தை தான் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ‘அங்கிருந்த பல பெண்களை சந்தித்தேன் குறிப்பாக ஒரு பெண்ணின் அறைக்கும் சென்றேன்.
READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!
அப்பொழுது அவர்களுடைய கட்டில் உயரமாக இருந்தது. எதற்காக கட்டில் இந்த அளவுக்கு உயரமாக இருக் கிறது என்று கேள்வி எழுப்பினேன். நான் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் போது கட்டில் அடியில் தான் என்னுடைய குழந்தையும் கணவரும் இருப்பார்கள் என கூறினார். அவர் அப்படி கூறியதைக் கேட்டதும் நான் நொறுங்கிவிட்டேன். அந்த வேதனையையும் சிரித்துக் கொண்டுதான் கூறினார்.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
அதை பற்றியும் நான் அவரிடம் கேட்டேன். இவ்வளவு கஷ்டமான விஷ யத்தை சிரித்துக் கொண்டே கூறுகிறீர் களே என்று கேட்டேன். அதற்கு அவர் எங்களிடம் எந்த உணர்ச்சியும் கிடையாது. அழுவதற்கு என எங்களுக்கு எந்த வலியும் கிடையாது. எல்லாம் பழக்கமாகிவிட்டது. நாங்கள் ஒரு உயிருள்ள பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு எல்லா வேதனை மற்றும், துக்கம், சோகம், என இதில் எதுவுமே இல்லை. எப்படியோ வாழவேண்டும் அல்லவா? என சிரித்தபடி கூறினார். அவர் பேசியதை பார்த்தவுடன் என்னுடைய கண்களில் கண்ணீர் வந்த்துவிட்டது. அது மட்டுமில்லை, இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் தான் நாம் நடிக்க போகிறோமா? என்று கதறி அழுது கொண்டு நான் வீட்டுக்கு சென்றேன்” எனவும் நடிகை மிருணாள் தாகூர் வேதனையுடன் பேசியுள்ளார்.