#image_title
Mrunal Thakur : சீதா ராமம் படத்தால் தான் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.
மிருணாள் தாகூர் என்ற பெயரை கேட்டவுடன் நம்மளுடைய நினைவுக்கு வருவது சீதா தான். சீதா ராமம் படத்தில் அந்த அளவிற்கு மிகவும் அசத்தலான நடிப்பை மிருணாள் தாகூர் வெளிப்படுத்தி இருப்பார் என்றே கூறலாம். இந்த சீதாராமன் படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, தமிழ் என எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய ஹிட் ஆனது.
இதன் மூலம் மிருணாள் தாகூருக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து அவருடைய பெயரும் வெளியே தெரிந்தது என்றே சொல்லலாம். ஆனால், இந்த சீதா ராமம் படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் மிருணாள் தாகூர் ரொம்பவே கஷ்டப்பட்டாரம். எந்த அளவிற்கு கஷ்டம் என்றால் படத்தில் இருந்து விலகிவிடுவோமா என்கிற அளவுக்கு கஷ்டப்பட்டாரம்.
ஏனென்றால், இந்த படத்தில் நடிக்கும்போது நடிகை மிருணாள் தாகூர் க்கு தெலுங்கு சுத்தமாக தெரியாதாம். எனவே நடிக்க சற்று கஷ்டப்பட்டாரம். இதனாலே படப்பிடிப்பு தளத்தில் கூட அவர் சற்று அழுவாராம். அதன்பிறகு படம் வெளியாகி அதில் கிடைத்த வரவேற்பு எல்லாம் தன்னுடைய கண்ணீரை வீணாக்கவில்லை என்று உணர்ந்துகொண்டாராம்.
இருந்தாலும், முதலில் கதையை கேட்டுவிட்டு தெலுங்கில் இருக்கிறதே ரொம்பவே கஷ்ட்டமாக இருக்கும் என்று நினைத்து நடிக்கவே சிரமைப்பட்டாராம்.இருந்தாலும் கஷ்டம் ஒரு புறம் இருக்க சிறு வயதில் இருந்தே இளவரசியாக நடிக்க ஆசை பட்டாராம். அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறிவிட்டதாம். இந்த படத்தால் பட்ட கஷ்ட்டத்தால் இனிமேல் தெலுங்கு படங்களிலே நடிக்க கூடாது இன்றும் நினைத்தாராம். பிறகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் இனிமேல் நடிக்கலாம் என்றும் ஆசைபட்டாராம். இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…