தர லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்தியின் Mr.லோக்கல்..!டிரைலர் இந்நாளில்..!
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் Mr.லோக்கல் படம் உருவாகி உள்ளது.இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இந்நிலையில் அவருக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது அதை சில தினங்களுக்கு முன் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச்சை பரிசாக அளித்து படகுழுவில் இருந்து விடைப்பெற்றார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கான ஒரு சோலோ பாடல் மட்டும் மீதம் உள்ளது அது படமாக்கபட வேண்டிய நிலையில் Mr.லோக்கல் படத்தின் டிரைலர் ஆனது வருகின்ற 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் இந்த நாளை முன்னிட்டு டிரைலர் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.ஏனென்றால் கடந்த 3ஆம் தேதி சிவகார்த்திகேயன் சினிமாக்குள் வந்து 7 வருடங்கள் நிறைவடைந்த நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.