பட்ஜெட்டை தொடுமா விடாமுயற்சி? வசூல் விவரம் இதோ!
விடாமுயற்சி திரைப்படம் வெளியான 4 நாட்களில் செய்த வசூல் விவரம் பற்றிய குழப்பமான தகவல் வெளியாகி வருவதால் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்னை : அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் விடாமுயற்சி. மொத்தமாக 220 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பட்ஜெட்டை தாண்டுமா? என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் காத்துள்ளது.
இந்த சூழலில், படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் படத்தின் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது. எனவே, விடாமுயற்சி வசூல் பற்றி ஊடகங்கள் மட்டுமே தகவல்களை வெளியீட்டு வருகிறது.
அதன்படி, HINDUSTANTIMES நிறுவனம் வெளியீட்டு இருக்கும் தகவலின் படி, விடாமுயற்சி படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ. 26 கோடி வசூலித்தது, இரண்டாவது நாளில் ரூ. 10.25 கோடி, மூன்றாவது நாளில் ரூ. 13.5 கோடி, நான்காவது நாளில் ரூ. 11.92 கோடி என மொத்தமாக இந்தியா முழுவதும் ரூ. 61.67 கோடி, உலகம் முழுவதும் 90 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதைப்போல, The Indian Express நிறுவனம் கொடுத்த தகவலின் படி, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.56 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.
mint – கொடுத்த தகவலின் படி, நான்கு நாட்களில், இந்தியாவில் மொத்தமாக விடாமுயற்சி ரூ. 61.67 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 92 கோடி வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், சில ஊடகங்கள் விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 4 நாட்களில் 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், 150 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாகவும் தகவலை வெளியீட்டு வருகிறார்கள். இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரிய வரும்.