ஜனவரி 10 தான் வரோம்! ரிலீஸ் தேதியை உறுதி செய்த வணங்கான்!
வணங்கான் படம் திட்டமிட்ட படி ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயம், மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம்ஜெஞ்சர் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கு படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானால் கூட படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
எனவே, இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதன் காரணத்தால் இந்த நேரத்தில் படத்தை வெளியீட்டால் நமக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்பதால் வணங்கான் படக்குழு தங்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படுமா? எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதி செய்யும் விதமாக படக்குழு பாடல் வெளியாகும் போஸ்டருடன் ஜனவரி 10 என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு உறுதி செய்துள்ளது. ஒரு வேலை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இருந்தது என்றால் நிச்சயமாக இதனை படக்குழு கூறியிருக்காது. எனவே, அந்த தேதியில் தான் ரிலீஸ் என்பதை படக்குழு உறுதியாகவே வைத்துள்ளது.