நடிகர் ஆரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஷ்ணு விஷால்!!!
நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஆரி.தற்போது அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கி வரும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தில் கதாநாயகனாக ஆரி மற்றும் கதாநாயகியாக சுபாஷி நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் ”நான் கடவுள்” ராஜேந்திரன் , ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” பகவதி பெருமாள் , கலக்கப் போவது யாரு” சரத் , பழநி மற்றும் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்.